இடுகைகள்

Online

  Online – Both of us on our screens Talking to others Or maybe looking At each other’s profiles, As we stare at the six letter word That flashes in front of our eyes, Filling us with the question – ‘Are you talking to someone else, tonight?’ A question we can’t ask, Because we’ve lost those rights. Yes, I talk to someone else And so do you. And just like this, So do our new someones Think about the someones From their past, too But I still stare at your name On my phone’s screen Wishing we still had that telepathy Where you’d know I’m waiting For you to drop a text, maybe. But it’s dead, like most millennial relationships So I stare instead – At a screen, once in a while Hoping that maybe You too, stare back at me. -Arunima Gururani is a 24-year-old based in Delhi and is passionate about social justice issues and fiction.

அதிவேக வாழ்க்கை......

படம்
வாழ்க்கை எப்பிடி போகுதுங்க ? நல்ல இருக்கீங்களா ? போன்ற பண்பாடு சார்ந்த நலம் விசாரிப்புகளின் போது  அனேக மனிதர்களிடமிருந்து  வரும்  பதில்கள் வெறுமை என்னும் புகையை கக்கியபடியே வந்து விழுகின்றன. இப்போதெலாம் நமது வாழ்க்கை பெரும்பாலான நேரங்கள் அவசர கதியிலியே நிகழ்கிறது ... ஏன் இவ்வளவு அதிர்வெண் வேகத்தில் அதிர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறோம் எண்டு யோசிக்ககூட நேரம் இல்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் கூட இல்லாமல் அதன் வேகத்தை முந்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் . பெரும்பாலான மக்கள் வருங்கால திட்டங்களை வைத்துக் கொண்டு அதற்கு தயாராகும் பொருட்டு சுழன்றுக் கொண்டிருக்கின்றனர் ..... ஆனால் இறுதிவரை தாங்கள் நினைத்தது போல் ஒரு வாழ்க்கையை வாழ முடியாமலே மடிகின்றனர் .. நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் அமைதியான ஆர்பாட்டம் இல்லாத வாழ்க்கையை நம்மால்  வாழ முடிவதில்லை. .....         ஒவ்வொரு மனிதனுக்கும்  அழகான தருணங்கள் அடிக்கடி நாம் சந்திக்கின்ற பாதை திருப்பங்களை போல் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன .. ஆனால் நம் மனம் திருப்பங்களே இல்லாத புறவழி சாலையையே நாடி செல்கிறது ... அழாகான காலை , அலுவலகம் முடித்து வீட

சாதிப்பது காதலில்லை.. சிந்திப்பதும் கூட.

படம்
இன்று  தொலைக்காட்சியில் எந்த ஒரு சேனலை திருப்பினாலும் வரும் செய்தி "காதல் மனைவி திவ்யா பிரிந்த விரக்தியில் இளவரசன் ரயில் பாதையில் சடலமாக கிடந்தார்". ஏழு  மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதல் கல்யாணத்தால் திவ்யாவின் குடும்பமே நிலைகுலைந்து போனது . திவ்யாவை கனவுகளோடு வளர்த்த அவளது தந்தை அந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் எனவும் தர்மபுரியே ஜாதி  கலவரத்தால் தத்தளிததும் யாவரும் அறிந்ததே. அப்போதும் திவ்யா தனது காதல் வாழ்கையே முக்கியம் என இளவரசனோடு அடைக்கலம் புகுந்து விட்டாள். ஏழு மாதங்கள் கடந்து போன வாரம் தனது அம்மாவோடு இருக்க போவதாகவும் அவர் பாவம் தனியாக இருக்கிறார் எனவும் கூறி அம்மாவுடன் சென்று விட்டாள் .அனால் பாவப்பட்ட  இளவரசன் இன்று  தண்டவாளத்தில் பிணமாக கிடக்கிறான் . அது தற்கொலையா அல்லது கொலையா என கூட தெரியவில்லை. இதை அலசி ஆராய்வதால் போன இளவரசனின் உயிரோ திவ்யாவின் தந்தை உயிரோ மீண்டும் வர போவதில்லை. இது தமிழகத்தில் உள்ள எல்லா இளவயதினருக்கும் ஏதோ ஒன்றை தெரிவிக்கிறது. நாம் விரும்பியவரையே கை பிடித்து அவருடனே சென்று வாழ இது ஒன்றும் வெளிநாடு கிடையாது. இது தமிழகம்.கலாச்ச

பேருந்து பயணம்

படம்
பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில்  பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே  இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய  பேருந்துகளின்  மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக  செல்வேன் .. பெரும்பாலான  பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை  விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்தி , இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்குள் பயணசீட்டு வாங்கிய ப

தமிழில் இணைய முகவரிகள்:

படம்
இணையத்தில் இன்று ஏராளமான தமிழ் இணையத்தளங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏராளமானவர்கள் வலைப் பூக்களை தமிழில் எழுதி வருகிறார்கள்.ஆனால் நாம் குறித்த தளங்களை அடைவதற்கு ஆங்கில முகவரிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது ஆனால் இந்த தமிழ் இணைய முகவரிகளின் அறிமுகத்துடன் நாம் இனி முகவரிகளையும் தமிழில் எழுதலாம்.முக்கியமாக உலகத்தில் முதன் முதலாக தமிழில் இணைய முகவரியை எழுதும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. இணையத்தில் உள்ள வளங்கள் இணைய முகவரிகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக www.nic.lk முகவரியைப் பார்க்கும் எவரும் இது இலங்கை அரசுக்குரியது என இலகுவில் சொல்லிவிடலாம். இந்த இணைய முகவரியில் .lK என்பது நாட்டைக் குறிக்கிறது. இவ்வாறு ஏனைய நாடுகளைக் குறிப்பதற்கும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக in ஆனது இந்தியாவைக் குறிக்கும். இதே போல் com.org..net... info போன்றவையும் இணைய முகவரியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக:- www.google. com எனும் போது அத ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய இணையத்தளம் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம் இந்த நாடுகளைக் குறிக்கும் .lk, .com, .ne

.புஷ்புஷ்' வண்டி

இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ...  'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ

இதுவா சிறந்த கல்வி ...?

இ ன்றைய கல்வி ஏந்த நிலையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான +௨ தேர்வு முடிவுகள் .. முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் , இல்லை அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியை சேர்ந்தவர்கள் .. இதற்காக அங்கு உள்ள பள்ளிகள் மட்டுமே சிறந்த பள்ளிகள் என்று ஆக போவதில்லை ..இதற்காக அந்த மாவட்டம் பெருமை பட்டுக் கொள்ளலாமே தவிர , ஒரு சாமானியனுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும் .. அதவாது நாமக்கல் , திருசெங்கோடு பகுதிகளை பொறுத்துவரை பள்ளி கல்லூரிகள் மற்ற மாவட்டங்களை  விட அதிக எண்ணிக்கையில் காணப்படும் .. இதற்காக மட்டுமே கல்வி மாவட்டத்தில் சிறந்த மாவட்டம் என்று கருத முடியாது .. அங்கு உள்ள பள்ளிகளின் நிலையே வேறு ..        அதாவது அங்கு உள்ள பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு , என்பது திரும்ப திரும்ப பயிற்சியளித்தல் என்ற நிலையில் இருக்கும் ..   தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து,